ரூ.17.79 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது டொயோடா இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட்

டொயோடா நிறுவனம் இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட் எடிசன் மாடலை ரூ.17.79 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலின் எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ZX  மற்றும் VX வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த மாடல் கேப்டன் இருக்கை அமைப்பு கொண்ட ஆறு பேர் அமரும் இருக்கையுடன் மட்டுமே  கிடைக்கும். 

வேரியன்ட் வாரியாக இதன் டெல்லி ஷோரூம் விலை விவரம்: 

Toyota Innova Touring Sport petrol manual – ரூ  17.79 லட்சம் 
Toyota Innova Touring Sport petrol Automatic – ரூ  20.84 லட்சம் 
Toyota Innova Touring Sport diesel manual – ரூ  18.91 லட்சம் 
Toyota Innova Touring Sport diesel automatic – ரூ  22.15 லட்சம்

வெளிப்புறத்தில் ஸ்போர்ட்டி பாடி கிளாடிங்குகள், வீல் ஆர்ச், பாடி ஸ்கிர்ட்ஸ், குரோம் அலங்காரங்கள், ஸ்மோக்ட் முகப்பு விளக்கு மற்றும் கருப்பு நிற அலாய் ஆகியவையும் உட்புறத்தில் ப்ரீமியம் லெதர், டூரிங் ஸ்போர்ட் எம்போஸ்ட் தரை விரிப்பு மற்றும் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் அதே 2.8 லிட்டர் & 2.4 லிட்டர் டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் தான் கிடைக்கும். இதன் ஆட்டோமேட்டிக் டீசல் என்ஜின் 174 bhp திறனும் 360Nm டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் இதன் மேனுவல் டீசல் என்ஜின் 150 bhp திறனும் 343Nm டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மற்றும் இதன் பெட்ரோல் எஞ்சின் 164 bhp திறனும் 245Nm  டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த எஞ்சின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சில் கிடைக்கும். இந்த இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட் எடிசன் மாடல் சாதாரண மாடலை விட ரூ 75,000 அதிகம் விலை கொண்டது ஆகும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.