லெக்சஸ் பிராண்ட் சொகுசு கார்களை இந்தியாவில் வெளியிட்டது டொயோடா

டொயோட்டா நிறுவனம் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட லெக்சஸ் பிராண்ட் சொகுசு கார்களை இந்தியாவில் முதன் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. டொயோட்டா நிறுவனம், விலை உயர்ந்த சொகுசு கார்களை 1989ஆம் ஆண்டு முதல் லெக்ஸஸ் என்ற பிராண்டின் கீழ் சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. முதல் கட்டமாக லெக்சஸ்  RX 450h, ES 300h மற்றும்  LX 450d என மூன்று மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில்  RX 450h மாடல் இரண்டு வேரியண்டிலும் மற்ற மாடல்கள் தலா ஒரு வேரியண்டிலும் வெளியிடப்பட்டுள்ளது.

 RX 450h மாடல் ஒரு ஹைபிரிட் SUV  மாடல் ஆகும். இதன்  RX 450h Luxury  வேரியன்ட் ரூ. 1.07 கோடி விலையிலும் மற்றும் RX 450h F-Sport வேரியன்ட் ரூ. 1.09 கோடி விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் 3.5 லிட்டர் V6 VVT-i பெட்ரோல் என்ஜினும் 650V  A/C மின் மோட்டோரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் 262  Bhp  திறனையும் 335  Nm இழுவைத்திறனையும் மற்றும் இதன் மின் மோட்டார் 68 Bhp  திறனையும் 139  Nm இழுவைத்திறனையும்  வழங்கும். இவை இரண்டும் இணைந்து 310 Bhp  திறனையும் 360 Nm இழுவைத்திறனையும் வெளிப்படுத்தும். இந்த திறன் e-CVT ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மூலம் நான்கு வீலுக்கும் கடத்தப்படுகிறது.

ES 300h மாடல் ஒரு ஹைபிரிட் சொகுசு செடான் மாடல் ஆகும். இந்த மாடல் டொயோடா கேம்ரி மாடலின் பிளாட்பார்மில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் ரூ.55.27 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினும் மின் மோட்டோரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் 160 Bhp  திறனையும் 233 Nm இழுவைத்திறனையும் மற்றும் இதன் மின் மோட்டார் 143 Bhp  திறனையும் 270  Nm இழுவைத்திறனையும்  வழங்கும். இந்த திறன் e-CVT ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மூலம் முன் வீலுக்கு கடத்தப்படுகிறது. இந்த மாடல் லிட்டருக்கு 17 கிலோமீட்டர் மைலேஜ் தரும்.

LX 450d மாடல் தான் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடல்களில் அதிக விலை கொண்டதாக இருக்கும். மற்றும் இதன் விலை விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த மாடல் டொயோடா லேன்ட் குரூஸர் மாடலின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாடலில் 4.5 லிட்டர் டர்போ சார்ஜ் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 270 Bhp  திறனையும் 650  Nm இழுவைத்திறனையும்  வழங்கும். இந்த திறன் ஆறு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மூலம் நான்கு வீலுக்கும் கடத்தப்படுகிறது. தற்போது லெக்சஸ் பிரான்டிற்கு என பிரத்தியேக ஷோரூம்கள்  கிடையாது விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.