வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட டொயோடா எட்டியோஸ் மற்றும் எட்டியோஸ் லிவா

டொயோடா  நிறுவனம் மேம்படுத்தப்பட்ட எட்டியோஸ் செடான் மற்றும் எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.  எட்டியோஸ் செடான் மாடல் ரூ.6.43 லட்சம் மும்பை ஷோரூம் ஆரம்ப விலையிலும் எட்டியோஸ் லிவா ஹேட்ச்பேக் மாடல் ரூ.5.24 லட்சம் மும்பை ஷோரூம் ஆரம்ப விலையிலும் வெளியிடப்பட்டுள்ளது. 

இரண்டு மாடலிலுமே சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிப்புற தோற்றத்தில் புதிய பம்பர் மற்றும் க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முன்பை விட தற்போது சொகுசானஅனுபவத்தை தருமாறு இருக்கை அமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடுதலாக சில உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதியை பொறுத்த வரை இரண்டு காற்றுப்பை, ABS  மற்றும் குழந்தைகள் இருக்கை ஆகியவை அணைத்து வேரியண்டிலும் கிடைக்கும்.

எஞ்சினை பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே 1.2 மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சினிலேயே தான் கிடைக்கும். செயல்திறனில் மாற்றம் செய்யப்படவில்லை.

வேரியன்ட் வாரியாக மும்பை ஷோ ரூம் விலை விவரம்:
Etios Liva 
பெட்ரோல்
STD - ரூ 5.24 லட்சம்
DLX - ரூ 5.58 லட்சம்
HIGH - ரூ 5.73 லட்சம்
PREMIUM - ரூ 6.28 லட்சம்
டீசல் 
STD - ரூ 6.61 லட்சம்
DLX - ரூ 6.94 லட்சம்
HIGH -ரூ 7.02 லட்சம்
PREMIUM - ரூ 7.44 லட்சம்

Etios 
Platinum 
பெட்ரோல்
STD - ரூ 6.43 லட்சம்
DLX - ரூ 6.83 லட்சம்
HIGH - ரூ 7.17 லட்சம்
PREMIUM - ரூ 7.74 லட்சம்
டீசல் 
STD - ரூ 7.56 லட்சம்
DLX - ரூ 7.96 லட்சம்
HIGH - ரூ 8.30 லட்சம்
PREMIUM - ரூ 8.87 
லட்சம்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.