ரூ.42.39 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய டொயோடா ப்ரியஸ்

டொயோடா நிறுவனம் நான்காம் தலைமுறை ப்ரியஸ் ஹைபிரிட் மாடலை ரூ.42.39 லட்சம் சென்னை ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. டொயோடா நிறுவனம் ஒரே நாளில் கேம்ரி மாடலை தொடர்ந்து தலைமுறை ப்ரியஸ் மாடலையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் 1997 ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இதன் நான்காம் தலைமுறை மாடலை வெளியிட்டுள்ளது டொயோடா நிறுவனம். இந்த மாடல் TNGA பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிய LED பனி விளக்குகள், 15 இன்ச் அலாய் வீல், பகல் நேரத்தில் ஒளிரும் விளக்குகளுடன் கூடிய LED முகப்பு விளக்குகள், ஸ்மார்ட் என்ட்ரி டோர், 10  ஸ்பீக்கர் கொண்ட JBL மியூசிக் சிஸ்டம், புதிய நேவிகேஷன் சிஸ்டம், வயர்லெஸ் மொபைல் சார்ஜர், ஏழு காற்றுப்பைகள் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 1.8 லிட்டர் பெட்ரோல்  எஞ்சினும் 60 Kw  எலெக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இதன்  பெட்ரோல்  என்ஜின் 98 bhp (5200 rpm) திறனும் 142Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மற்றும் இதன் எலக்ட்ரிக் மோட்டார் 72 Bhp  திறனும் 163Nm  டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.  இந்த  மாடல் 26.27 kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் இரண்டும் இனைந்து செயல்படும் போது 122 bhp திறனை வெளிப்படுத்தும். இந்த மாடலில் CVT  கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.