ஒரு மாதத்திற்குள் 18,000 முன்பதிவுகளை கடந்து சாதனை படைத்தது டொயோடா இன்னோவ க்ரிஸ்ட்டா

டொயோடா நிறுவனத்தின் இன்னோவ க்ரிஸ்ட்டா மாடல் வெளியிடப்பட்டு ஒரு மாதத்திற்குள் 18,000 க்கும் மேலான முன்பதிவுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. பழைய மாடலை விட இந்த மாடல் விலை அதிகமானதாக இருந்தும் இவ்வளவு முன்பதிவுகளை பெற்று சாதித்துள்ளது இன்னோவ க்ரிஸ்ட்டா. மேலும் ஆரம்ப நிலை வேரியன்ட்டுகளை விட டாப் வேரியண்டுக்கு தான் அதிக முன்பதிவுகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மேம்படுத்தப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா  மாடலில் வெளிப்புறம் மற்றும் உட்புற தோற்றத்தில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய முன்புற கிரில், புதிய ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் மற்றும்  பனி விளக்குகள் ஆகியாவை புதிதாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்திலும் அதிக சொகுசான அனுபவத்தை தரும் அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக டேஸ் போர்டு முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது.

2016  டொயோடா  இன்னோவா க்ரிஸ்ட்டா  மாடலின்  என்ஜினும் மாற்றப்பட்டுள்ளது. புதிய 2.4 லிட்டர் & 2.8 லிட்டர்  டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 2.4 லிட்டர் என்ஜின் மேனுவல் ட்ரான்ஸ்மிசனிலும் 2.8 லிட்டர் என்ஜின் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனிலும் கிடைக்கும்.

2.4 லிட்டர் என்ஜின் 150 bhp (3400 rpm) திறனும் 343Nm (1400-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 15.01 kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.   2.8 லிட்டர் என்ஜின் 174 bhp (3400 rpm) திறனும் 360Nm (1200-3400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 14.29 kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

டொயோடா நிறுவனம் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட  இன்னோவா க்ரிஸ்டா மாடலை தீபாவளி பண்டிகை காலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.