அக்டோபர் மாதம் வெளியிடப்படும் சில கார் மாடல்கள்

செவ்ரொலெட் ட்ரையல்பிளேசர் :-

ட்ரையல்பிளேசர் SUV மாடல் 2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த வாகன கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மாடல் 2.8 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜினில் கிடைக்கும். இந்த என்ஜின் 193 bhp திறனும் 500 Nm இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டதுடன் கிடைக்கும். இந்த மாடல் டொயோடா - ஃபார்சுனர் மாடலுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும் எனவும் மேலும் 20 முதல் 25 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபியட் அபார்த் புண்டோ :-

இந்தியாவின் மிக அதிக செயல்திறன் கொண்ட அபார்த் புண்டோ மாடலை  ஃபியட் நிறுவனம் அக்டோபர் மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்புதான் ஃபியட் நிறுவனம் தனது இணையத்தளத்தில்  அபார்த் புண்டோ மாடலின் அதிகாரப்பூர்வ படத்தை வெளியிட்டது. ஃபியட் நிறுவனம் அபார்த் பிராண்டில்  595 காம்படிசன் மாடலை  விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

அபார்த் புண்டோ மாடல்  அதே 1.4 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். ஆனால் இதன் செயல்திறனை மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 145 Bhp திறனையும் 200 Nm இழுவை திறனையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் அனைத்து வீலும் டிஸ்க் ப்ரேக் கொண்டதாக இருக்கும். மேலும் அதிக செயல்திறனுக்கு ஏற்றவாறு சஸ்பென்சன், கிரௌண்ட் கிளியரன்ஸ் ஆகியவை மாற்றப்படும். உட்புறத்தில் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்போர்டியாக தெரிய சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுசுகி பலெனோ :-

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் அறிமுகபடுத்தப்பட்ட YRA கான்செப்ட் மாடலின் பெயரை பலெனோ என்று சில நாட்களுக்கு முன் தான்  மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்தது. மேலும் இந்த மாடலை  ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கும் வைத்திருந்தது.  இந்நிலையில் இந்த மாடல் அக்டோபர் 26 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய நாடுகளில் மட்டும் இந்த மாடல் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் பூஸ்டர் ஜெட் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ சார்ஜ் டியூவல் ஜெட் என்ஜினில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தியாவில் சியாஸ் மாடலில் உள்ள என்ஜினில் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் 6 லட்சம் முதல் 9 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேம்படுத்தப்பட்ட மாருதி சுசுகி - எர்டிகா :-

மேம்படுத்தப்பட்ட மாருதி சுசுகி - எர்டிகா மாடல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனில் அக்டோபர் 10 அன்று  வெளியிடப்படும் என எதிர்பார்கப்படுகிறது. வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நிறைய இடங்களில் குரோம் வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

என்ஜினில் எந்த மாற்றமும் செய்யப்பட்டிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மாடல் தற்போது 1.4 லிட்டர்  பெட்ரோல் என்ஜின்   மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின்  95bhp (6000 rpm) திறனும்  130Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. மேலும் இதன்  டீசல்  என்ஜின்  90bhp (4000 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.