வெளியிடப்பட்டது 2018 ஆம் ஆண்டு ரெனோ க்விட்: விலையில் மாற்றம் இல்லை

ரெனோ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு க்விட் மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் சில உபகரணங்களும் மட்டுமே கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

2018 ஆம் ஆண்டு ரெனோ க்விட் மாடலில் புதிய பின்புற கேமரா, பின்புற ஆர்ம் ரெஸ்ட், பின்புறத்தில் 12V சாக்கெட் மற்றும் பின்புற ரெக்ட்ரேக்டபிள் சீட் பெல்ட் ஆகியவை கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் AMT மடலில் கூடுதலாக க்ரீப் பங்க்சன் கொடுக்கப்பட்டுள்ளது. ரெனோ நிறுவனம் இதை ட்ராபிக் அசிஸ்ட் என குறிப்பிட்டுள்ளது. இந்த வசதி ட்ராபிக் மற்றும் மேடான சாலைகளில் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த மாடலில் சில குரோம் அலங்காரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே  0.8 மற்றும் 1.0 லிட்டர் என்ஜினில் தான் கிடைக்கிறது. 0.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 54 bhp (5678 rpm) திறனும் 72Nm (4386rpm) டார்க் எனும் இழுவைதிறனும், 1.0 லிட்டர் என்ஜின் 67 Bhp திறனையும் 91 Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த இரண்டு மாடலும் ஐந்து ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும், மேலும் 1.0 லிட்டர் மாடல் கூடுதலாக AMT ட்ரான்ஸ்மிஷனிலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.