ரூ49.1 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட லேன்ட் ரோவர் ரேஞ் ரோவர் எவோக்

லேன்ட் ரோவர் நிறுவனம் புதிய மேம்படுத்தப்பட்ட 2017 ஆம் ஆண்டு  ரேஞ் ரோவர் எவோக்  மாடலை ரூ49.1 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. மொத்தம் ஆறு வேரியண்டுகளில் இந்த மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

வேரியன்ட் வாரியாக இதன் விலை விவரம்:
பியூர்: ரூ. 49.10 லட்சம்
SE: ரூ. 54.20 லட்சம்
டைனமிக்: ரூ. 56.30 லட்சம்
HSE : ரூ. 59.25 லட்சம்
HSE டைனமிக் : ரூ. 64.65 லட்சம்
HSE டைனமிக் எம்பர் எடிஷன்: ரூ. 67.90 லட்சம்

இந்த மாடலுக்கும் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாடலுக்கும் தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாடலில் புதிய 2.0 இன்ஜெனியம் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் தான் ஜாகுவார் XF  மாடலிலும் பொருத்தப்பட்டுள்ளது.

இது 180 bhp திறனையும் 430 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 9 வேக ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அதிகபட்சமாக  மணிக்கு 195 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் மற்றும் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது.

இந்த மாடலில் டெர்ரைன் மேனேஜ்மேண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓட்டுநர் தேவைக்கு ஏற்ப கிராஸ், சென்ட், ஸ்நொவ் அல்லது ராக் இவற்றில் ஏதேனும் ஒரு மோடை தேர்வு செய்து கொள்ள முடியும். கருப்பு மற்றும் சிவப்பு வண்ண கலவையில் சில ஒப்பனை மாற்றங்களை மட்டும் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் செய்து மேலும் அழகு கூட்டப்பட்டுள்ள ரேஞ் ரோவர் எவோக் எம்பர் எடிசன் எனும் சிறப்பு பதிப்பு மாடலையும் வெளியிட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.