இன்று வெளியிடப்படுகிறது மேம்படுத்தப்பட்ட டாடா டிகோர், டட்சன் கோ மற்றும் கோ பிளஸ்

மேம்படுத்தப்பட்ட டாடா டிகோர் மற்றும் மேம்படுத்தப்பட்ட டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் என மூன்று மாடல்கள் இன்று வெளியிடப்படவுள்ளது. இந்த மாடல்களில் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய டாடா டிகோர்

புதிய முன்புற மற்றும் பின்புற விளக்குகளைகொண்ட டீசரை மட்டும் தான் டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மற்றபடி இந்த புதிய மாடலில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் பெரிய 6.5 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது, அதே  1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். தன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் பெட்ரோல் மாடல் 20.3 Kmpl மைலேஜையும், டீசல் மாடல் 24.7 Kmpl மைலேஜையும் வழங்கும். 

இந்த மாடல் ஹோண்டா அமேஸ், வோல்க்ஸ் வேகன் அமியோ, டாடா செஸ்ட், போர்ட் ஆஸ்பயர், மாருதி சுசூகி ஸ்விப்ட் டிசைர் மற்றும் ஹூண்டாய் எக்ஸன்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டட்சன் கோ மற்றும் கோ பிளஸ்

இந்த மாடலின் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறம் தொடர்பான படங்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முந்தய மாடலை விட கூடுதல் உபகரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது, அதே அதே 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் தான் கிடைக்கும். இந்த எஞ்சின் 68bhp (6000 rpm) திறனும்104Nm (4000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த திறன் ஐந்து ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் மூலம் வீலுக்கு கடத்தப்படுகிறது. டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் மாடல்கள் முந்தய வண்ணங்களுடன் கூடுதலாக முறையே ஆரஞ்சு மற்றும் பிரவுன் வானங்களிலும் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.