விரைவில் வெளியிடப்படும் மேம்படுத்தப்பட்ட டாடா டிகோர் காம்பேக்ட் செடான்

டாடா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட டிகோர் காம்பேக்ட் செடான் மாடலின் டீசரை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் 10 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய முன்புற மற்றும் பின்புற விளக்குகளைகொண்ட டீசரை மட்டும் தான் டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மற்றபடி இந்த புதிய மாடலில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் பெரிய 6.5 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது, அதே  1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். தன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் பெட்ரோல் மாடல் 20.3 Kmpl மைலேஜையும், டீசல் மாடல் 24.7 Kmpl மைலேஜையும் வழங்கும். 

இந்த மாடல் ஹோண்டா அமேஸ், வோல்க்ஸ் வேகன் அமியோ, டாடா செஸ்ட், போர்ட் ஆஸ்பயர், மாருதி சுசூகி ஸ்விப்ட் டிசைர் மற்றும் ஹூண்டாய் எக்ஸன்ட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.