அதிக திறன் மற்றும் சிறிய மாற்றங்களுடன் வெளியிடப்பட்ட புதிய ஃபோர்டு - ஈகோஸ்போர்ட்

அதிக திறன் மற்றும் சிறிய மாற்றங்களுடன் கூடிய புதிய ஈகோஸ்போர்ட் மாடலை வெளியிட்டுள்ளது ஃபோர்டு  நிறுவனம். தோற்றத்தில் ஏதும் பெரிய மாற்றங்கள் இல்லை. டீசல் என்ஜினின் திறன் மட்டும் முன்பை விட 10 Bhp திறனை அதிகம் வழங்குமாறு மாற்றப்பட்டுள்ளது. ஃபிகோ ஆஸ்பயர் மற்றும் ஃபிகோ போல இந்த மாடலின் எஞ்சினும் மாற்றப்பட்டுள்ளது ஆனால் ஃபிகோ ஆஸ்பயர் மாடல் 215 Nm இழுவைதிறனை தரும் ஆனால் ஈகோஸ்போர்ட் 205 Nm இழுவைதிறனை  மட்டுமே அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெளிப்புறத்தில் புதிய முகப்பு விளக்குகள், புதிய தானியங்கி வைப்பர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ட்ரெண்ட+ எனும் புதிய வேரியன்டையும் கூடுதலாக வெளியிட்டுள்ளது. தற்போது ஃபோர்டு - ஈகோஸ்போர்ட் மொத்தம் 11 வேரியண்டுகளில் கிடைக்கும். மேலும் புதிய ப்ரான்ஸ் வண்ணத்திலும் இந்த மாடல் வெளியிடப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.