வெளிப்படுத்தப்பட்டது வோல்க்‌ஸ் வேகன் அமியோ காம்பேக்ட் செடான்

வோல்க்ஸ் வேகன் நிறுவனம் போலோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அமியோ எனும் புத்தம் புதிய காம்பேக்ட் செடான் மாடலை வெளிப்படுத்தியது. மேலும் இந்த மாடல் ஜுன் அல்லது ஜுலை மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்புறம் மற்றும் பக்கவாட்டில் அப்படியே போலோ மாடலின் வடிவம் பயன்படுதப்பட்டுள்ளது. பின்புறம் மட்டும் செடான் போன்ற தோற்றத்தை தருமாரு வடிவம் மாற்றப்பட்டுள்ளது.  இந்த செக்மெண்டில் உள்ள மற்ற மாடல்களில் இல்லாத பல புதிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது. தானியங்கி வைப்பர் மற்றும் குரூஸ் கண்ட்ரோல் ஆகியவை குறிப்பாக கூறலாம். மேலும் பல சிறந்த அம்சங்களையும் இந்த மாடல் கொண்டுள்ளது.

இந்த மாடல் போலோ மாடலில் கிடைக்கும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.5 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 1198CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1498CC கொள்ளளவும் கொண்டது. இதன்  பெட்ரோல் என்ஜின் 75 bhp (5400 rpm) திறனும் 110Nm (3750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் டீசல் என்ஜின்  மாடல் 90 bhp (4200 rpm) திறனும் 230Nm (1500-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மேலும் இதன் டீசல் என்ஜினில் 7 ஸ்பீட் கொண்ட DSG ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கிடைக்கும்.

இந்த மாடல் மாருதி சுசுகி டிசைர், ஹுண்டாய் எக்ஸ்சென்ட், ஃபோர்டு  ஃபிகோ மற்றும் டாட்டா செஸ்ட் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.