மீண்டும் வருகிறது வோல்க்ஸ் வேகன் - பீட்டில் இம்முறை 1.4 லிட்டர் என்ஜினுடன்

வோல்க்ஸ் வேகன் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் பீட்டில் மாடலை வெளியிட இருக்கிறது. இது நீண்ட நாட்களாக வெளியிடப்படும் பழமையான மாடல்களில் ஒன்று. இம்முறை 1.4 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினுடன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 1.4 லிட்டர் என்ஜின் 158 bhp திறனும் 240 Nm  டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடலில் 7 வேக கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.3 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. 

 வோல்க்ஸ் வேகன் - பீட்டில் மாடல் இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு 2013 ஆம் ஆண்டு இந்த மாடல் இந்தியாவில் விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டது. இந்த மாடல் மினி கூப்பர் மற்றும் ஃபியட் - அபாரத் 595 காம்படிசன் மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.