அமியோ, போலோ மற்றும் வென்டோ மாடல்களின் சிறப்பு பதிப்பு மாடல்களை வெளியிட்டுள்ளது வோல்க்ஸ்வேகன்

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் நுழைந்து பத்து வருடங்கள் ஆனதை தொடர்ந்து அமியோ, போலோ மற்றும் வென்டோ மாடல்களின் சிறப்பு ஆனிவெர்சரி பதிப்பு மாடல்களை வெளியிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் சில ஆபர்களையும், சில பரிசுகளையும் சர்வீஸில் சில சலுகைகளையும் வழங்குவதுடன் வோல்க்ஸ்பெஸ்ட் 2017 எனும் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது. இந்த சிறப்பு பதிப்பு மாடலில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. மற்றபடி எந்த மாற்றமும் இல்லை.

போலோ மாடலில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள் 
-15 இன்ச் ரேசர் அலாய் வீல் 
-தோல் இருக்கை கவர் 
-பாடி கிராபிக்ஸ் 
- ஆன்டி பின்ச் பவர் விண்டோ 

அமியோ மாடலில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள் 
-15 இன்ச் டோசா அலாய் வீல் 
- தோல் இருக்கை கவர் 
-பாடி கிராபிக்ஸ் (பானட் மற்றும் பக்கவாட்டுப் பகுதி)
- கருப்பு நிற பின்புற ஸ்பாய்லர் 

வென்டோ  மாடலில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள் 
-புதிய அலாய் வீல் 
-கருப்பு மற்றும் க்ரே வண்ண உட்புறம் 
-முன்புற கை வைக்கும் பகுதி 
-பின்புற AC  வென்ட் 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே எஞ்சின் ஆப்ஷனில் தான் கிடைக்கும். போலோ மாடல் ரூ 5.99 லட்சம் ஷோரூம் விலையிலும், அமியோ மாடல் ரூ 5.79 லட்சம் ஷோரூம் விலையிலும் மற்றும் வென்டோ மாடல் ரூ 9.99 லட்சம் ஷோரூம் விலையிலும் கிடைக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.