புகாடி, லம்போர்கினி, பென்ட்லி அல்லது டுகாடி இவற்றில் எதையேனும் விற்பனை செய்யும் வோல்க்ஸ் வேகன்

உலகின் மிகப்பெரிய கார் நிறுவனமான வோல்க்ஸ் வேகன் மாசுக்கட்டுப்பாடு பிரச்சனை காரணமாக மிகப்பெரிய கடனில் தத்தளித்து வருகிறது. இதன் காரணமாக தனக்கு கீழ் இயங்கும் புகாடி, லம்போர்கினி, பென்ட்லி அல்லது டுகாடி இவற்றில் எதையேனும் விற்பனை செய்ய உள்ளதாக தெரிகிறது.

ஆடி, போர்சே, ஸ்கோடா, புகாடி, லம்போர்கினி, பென்ட்லி, டுகாடி மற்றும் பல நிறுவனங்கள் வோல்க்ஸ் வேகன் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வோல்க்ஸ் வேகன் கார்களின்  மாசுகட்டுப்பாடு சோதனையில் நடைபெற்ற குளறுபடியால் அதிக பணத்தை கட்டணமாக செலுத்த வேண்டி இருந்ததால் வோல்க்ஸ் வேகன் நிறுவனம் தற்போது மிகப்பெரிய கடனில் தத்தளித்து வருகிறது.

இதனால் புகாடி, லம்போர்கினி, பென்ட்லி அல்லது டுகாடி இவற்றில் எதையேனும் விற்பனை செய்ய உள்ளதாக தெரிகிறது. இவற்றில் எதை விற்றாலும் வோல்க்ஸ் வேகன் குழுமத்திற்கு மிகப்பெரிய இழப்பாகவே இருக்கும். இவை அதிகாராப்பூர்வமான முடிவு இல்லை என்பதால் வோல்க்ஸ் வேகன் நிறுவனம் கடனில் இருந்து தப்பிக்க வேறு முயற்சியையும் செய்யலாம்.  

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.