ரூ 29.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது வோல்க்ஸ்வேகன் பேஸட்

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் எட்டாவது தலைமுறை பேஸட் மாடலை மீண்டும் இந்தியாவில் ரூ 29.99 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் நான்கு வருடங்களுக்கு பிறகு இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ஏழாம் தலைமுறை பேஸட் 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இந்த மாடல் இரண்டு வேரியன்ட்டுகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. 

வேரியன்ட் வாரியாக ஷோரூம் விலை விவரம் :

  • VW Passat Comfortline: ரூ 29.99 லட்சம் 
  • VW Passat Highline: ரூ 32.99 லட்சம் 

வெளிப்புற வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. உட்புறத்தில் எட்டு இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் லக்சுரி செடான் செக்மென்ட்டில் வெளியிடப்பட்டுள்ளதால் ஒன்பது காற்றுப்பை, EPS, ABS, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 177Bhp திறனையும் 350Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஆறு ஸ்பீட் கொண்ட டியூவல் கிளட்ச் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த மாடல் அடுத்த வருட ஆரம்பத்தில் பெட்ரோல் எஞ்சினுடன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் டொயோட்டா கேம்ரி, ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் ஹோண்டா அக்கார்டு போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.