அக்டோபர் 10 ஆம் தேதி மீண்டும் இந்தியாவில் வெளியிடப்படும் வோல்க்ஸ்வேகன் பேஸட்

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் எட்டாவது தலைமுறை பேஸட் மாடலை மீண்டும் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்த மாடல் முதலில் டீசல் எஞ்சினில் மட்டும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் லக்சுரி செடான் செக்மென்ட்டில் வெளிப்படுவதால் அனைத்து விதமான வசதிகளையும் பெற்றிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த மாடல் ஆரம்பத்தில் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினில் தான் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 177Bhp திறனையும் 350Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஆறு ஸ்பீட் கொண்ட டியூவல் கிளட்ச் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் ஒரு சில நாடுகளில் ஹைபிரிட் எஞ்சினுடனும் வெளியிடப்படுகிறது ஆனால் இந்தியாவில் ஹைபிரிட் எஞ்சினுடன் வெளியிடப்படுமா என்பது சந்தேகமே.

இந்த மாடல் ஹோண்டா அக்கார்டு, ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் டொயோட்டா கேம்ரி மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும். மேலும் வோல்க்ஸ் வேகன் பேஸட் மாடல் ரூ 25 முதல் ரூ 30 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.