வெளியிடப்பட்டது வோல்க்ஸ்வேகன் போலோ GT ஸ்போர்ட் எடிசன்

வோல்க்ஸ்வேகன் நிறுவனம்  போலோ மாடலின் புதிய  GT ஸ்போர்ட் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏற்கனவே விற்பனையில் இருக்கும்  GT வேரியண்ட்டின் ஸ்போர்ட் வெர்சன் ஆகும். இந்த மாடல்  GT TSI மற்றும் GT TDI என இரண்டு எஞ்சினிலும் கிடைக்கும். இந்த மாடலில் ஸ்போர்ட்டியான சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடலில் புதிய மற்றும் பெரிய 16 இன்ச் கருப்பு நிற அலாய் வீல், GT ஸ்போர்ட் கிராபிக்ஸ், கருப்பு நிற பக்கவாட்டு கண்ணாடி, கருப்பு நிற ரூப், புதிய கருப்பு நிற பின்புற ஸ்பாய்லர் மற்றும் புதிய கருப்பு நிற உட்புறம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் மட்டுமே கிடைக்கும்.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை அதே 1.2 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல்  என்ஜினில் தான் கிடைக்கும். பெட்ரோல் என்ஜின் 105 bhp (5000 rpm) திறனும் 175Nm (1500-4100rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மற்றும்  டீசல் என்ஜின்  மாடல் 110 bhp (5000 rpm) திறனும் 250Nm (1500-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.  மேலும் இதன் பெட்ரோல் மாடல் 7 ஸ்பீட் டூயல் கிளட்ச் ட்ரான்ஸ்மிஷனிலும் டீசல் மாடல் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனிலும் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.