புதிய 2018 ஆம் ஆண்டு போலோ மாடலின் டீசர் வீடீயோவை வெளியிட்டது வோல்க்ஸ் வேகன்

வோல்க்ஸ் வேகன் நிறுவனம் ஆறாம் தலைமுறை போலோ மாடலின் இரண்டாவது டீசர் வீடீயோவை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் தான் இதன் முதல் டீசர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் வோல்க்ஸ் வேகன் நிறுவனத்தின் புதிய MBQ பிளாட் பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவில் முந்தய தலைமுறை மாடல்களின் படங்களிலிருந்து புதிய மாடல் தோன்றுவது போல் கொடுக்கப்பட்டுள்ளது. வோல்க்ஸ் வேகன் நிறுவனம் 1975 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுமார் 14 மில்லியன் போலோ மாடல்களை உலகளவில் விற்பனை செய்துள்ளது. வெளிப்புறதில் முந்தய மாடலின் வடிவம் அதிகம் தெரிகிறது. ஆனால் உட்புறம் முழுவதும் புதிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த மாடல் அதே எஞ்சின் ஆப்ஷனில் தான் வெளியிடப்படும். இதன் சோதனை ஓட்டப் படங்கள் ஏற்கனவே இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது. டீசரை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.