வெளிப்படுத்தப்பட்டது வோல்க்ஸ் வேகன் T - கிராஸ் ப்ரீஸ் காம்பேக்ட் SUV

வோல்க்ஸ் வேகன் நிறுவனம் புத்தம் புதிய T - கிராஸ் ப்ரீஸ் காம்பேக்ட் SUV கான்செப்ட் மாடலை வெளிப்படுத்தியது. இந்த கான்செப்ட் மாடல் திறந்த மேற்கூரையுடன் தோற்றம் தருகிறது ஆனால் தயாரிப்பு நிலை மாடல் திறந்த மேற்கூரையுடன் இருக்குமா அல்லது மூடிய மேற்கூரையுடன் இருக்குமா என்பது தெரியவில்லை. இந்த மாடல் போலோ மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது .

பெரிய கிரில், LED விளக்குகள் மற்றும் சதுர வடிவ பனி விளக்குகள் என சிறப்பான தோற்றத்தி தருகிறது. ஆனால் சற்று பார்பதற்கு ரேஞ் ரோவர் எவோக் மாடல் போன்ற தோற்றத்தை தருகிறது. இது 4133 மில்லி மீட்டர் நீளமும் 1798 மில்லி மீட்டர் அகலமும் 1563 மில்லி மீட்டர் உயரமும் மற்றும் 2565 மில்லி மீட்டர் வீல் பேஸும் கொண்டது.

என்ஜின் தொடர்பான தகவல்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் என்ஜினில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படும் என்பதும் தெரியவில்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.