ரூ 27.98 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது வோல்க்ஸ்வேகன் டைகுன்

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் கிராஸ் ஓவர் மாடலை இந்தியாவில் ரூ 27.98 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் முதலில் 2015 ஆம் ஆண்டு பிரான்க் புர்ட் மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 2016 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த மாடல் கம்பர்ட்லைன் மற்றும் ஹைலைன் என இரண்டு வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.

இந்த மாடல் புதிய MQB பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது புதிய மற்றும் எளிதில் மாற்றக்கூடிய பிளாட்பார்ம் ஆகும். இந்த இரண்டாம்  தலைமுறை மாடலின் வெளிப்புறத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உட்புறத்தில் அதிக மாற்றங்கள் இல்லை. இந்த மாடலில் 8 இன்ச் டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், பனோரமா  சன் ரூப், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூஸ் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட், கீலெஸ் என்ட்ரி மற்றும் பொத்தான் ஸ்டார்ட் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ABS, EBD, முன்புற காற்றுப்பை, பக்கவாட்டு காற்றுப்பை, கர்டைன் காற்றுப்பை, ரெயின் சென்சார், எலெட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், லேன் அசிஸ்ட் மற்றும் எமெர்ஜென்சி பிரேக் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் டீசல் என்ஜினில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 188Bhp திறனையும் 400Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 7 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டமும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.  இந்த மாடல் 4486 மிமீ நீளமும் 1839 மிமீ அகலமும் 1632 மிமீ உயரமும் மற்றும் 2682 மிமீ வீல் பேசும் கொண்டது. தற்போது டைகுன் மாடல் தான் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் விலையுயர்ந்த மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.