வெளிப்படுத்தப்பட்டது புதிய ஆறாம் தலைமுறை வோல்க்ஸ்வேகன் போலோ

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில்  ஆறாம் தலைமுறை போலோ மாடலை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஐரோப்பிய நாடுகள், லத்தின் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இந்த வருடத்திலேயே வெளியிடப்படும். மேலும் இந்த மாடல் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய MQB பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் புதிதாக நேச்சுரல் கேஸ் எஞ்சினிலும் கிடைக்கும்.

இந்த ஆறாம் தலைமுறை மாடல் முந்தய மாடலை விட சிறப்பான இடவசதி மற்றும் தோற்றத்தோடு  வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு பழைய மாடல் போலவே இருந்தாலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உட்புறம் முழுவதுமாக மாற்றப்பட்டுள்ளது. வெளிப்புற வண்ணத்திற்கு ஏற்ப உட்புறத்தில் அதே வண்ணத்தில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் 4,053 மில்லி மீட்டர் நீளமும்,  1,751 மில்லி மீட்டர் அகலமும், 1,446 மில்லி மீட்டர் உயரமும் மற்றும் 2,564 மில்லி மீட்டர் வீல் பேசும் கொண்டது. மேலும் இந்த மாடலில் 351 லிட்டர் பொருள்கள் வைப்பதற்கான இட வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், சன் ரூப் மற்றும் 8-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் உலகளவில் ஆறு  வித பெட்ரோல், இரண்டு வித டீசல் மற்றும் ஒரு நேச்சுரல் கேஸ் என ஒன்பது  விதமான என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும். இந்த மாடல் இந்தியாவில் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. அப்படியே வெளிப்பட்டாலும் சிறய மாற்றங்களுடன் அடுத்த வருடத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.