2017 போலோ R WRC மாடலின் வரைபடத்தை வெளியிட்டது வோல்க்ஸ் வேகன்

வோல்க்ஸ் வேகன்  நிறுவனம் உலக ராலி பந்தயத்திற்காக தயாரிக்கப்பட்ட 2017 போலோ R WRC  மாடலின் வரைபடத்தை வெளியிட்டது. இந்த மாடல்  உலக ராலி பந்தய கூட்டமைப்பின் புதிய விதிமுறைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த வோல்க்ஸ் வேகன் 2017 போலோ R WRC  மாடல் பழைய மாடலை விட சிறந்த ஏரோ டைனமிக் தன்மை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் எடை குறைவாகவும் இருக்கும். இந்த மாடலில் 1.6 லிட்டர் டர்போ சார்ஜ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 373 Bhp  திறனை வழங்கும்.
 

இந்த மாடலில் புதிய தொழில்நுட்ப வசதிகள் அதிகமாக பொருத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்து நடக்கவிருக்கும் உலக ராலி பந்தயத்தில் இந்த கார் சிறப்பான பங்களிப்பை தரும் எனவும் வோல்க்ஸ் வேகன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.