மார்ச் 11 அன்று இந்தியாவில் வெளியிடப்படும் வால்வோ S60 கிராஸ் கன்ட்ரி செடான்

வால்வோ நிறுவனம் வரும் மார்ச் 11 ஆம் தேதி இந்தியாவில் S60 கிராஸ் கன்ட்ரி செடான் மாடலை வெளியிட இருக்கிறது. இந்த மாடல் 2015 டெட்ராய்ட்  மோட்டார் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த மாடல்  S60  செடான் மாடலில் சில மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்போர்டியாக தெரிவதற்காக  இந்த மாடலில் புதிய பிளாஸ்டிக் கிலாடிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் கிரௌண்ட் கிளியரன்ஸ் (தரை இடைவெளி) அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண S60  செடான் மாடலை விட 65 மில்லி மீட்டர் அதிக கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது இந்த மாடல். குறிப்பாக இந்த மாடலின் கிரௌண்ட் கிளியரன்ஸ் அளவை சாலைகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம். இதனால் அணைத்து விதமான சாலைகளிலும் சிறப்பான ஒட்டுதல் அனுபவத்தை தரும். மேலும் இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரீமியம் கார் என்பதால் சன் ரூப், தானியங்கி குளிரூட்டி மற்றும் பின்புற கேமரா போன்ற அனைத்து சொகுசு  வசதிகளும் இருக்கும்.

இந்த மாடல் 2.4 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜினிலும் 2.4 லிட்டர் பெட்ரோல் என்ஜினிலும் உலக நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் எந்த என்ஜின் ஆப்சனில் வெளியிடப்படும் என்று தெரியவில்லை.  எந்த என்ஜினில் வெளியிடப்பட்டாலும் அது 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவே இருக்கும். மேலும் இந்த மாடல் ரூ.40 முதல் 50 லட்சம் விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.