ரூ 52.5 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது வால்வோ போல்ஸ்டார் S60

வால்வோ நிறுவனம் அதிக செயல்திறன் கொண்ட போல்ஸ்டார் S60 மாடலை ரூ 52.5 லட்சம் டெல்லி ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. சொகுசு கார் நிறுவனமான வால்வோ தனது அதிக செயல்திறன் கொண்ட கார்களை  போல்ஸ்டார்  பிராண்டில் விற்பனை செய்து வருகிறது. மேலும் போல்ஸ்டார் S60 மாடல் தான் இந்தியாவில் வெளியிடப்படும் முதல்  போல்ஸ்டார் பிராண்ட் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது  367 Bhp திறனையும் 467Nm இழுவைத்திறனையும் வழங்கும். இது சாதாரண மாடலை விட 61 Bhp திறனும் 67 Nm இல்லுவைத்திறனும் அதிகம்.  இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 வினாடிகளில் கடக்கும் மேலும் அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது.

சாதாரண S60 மாடலில் உள்ள அதே என்ஜினை எடுத்து பெரிய டர்போ சார்ஜெர், புதிய சூப்பர் சார்ஜெர், புதிய கேம் சாப்ட், பெரிய ஏர் இண்டேக், பெரிய பம்ப் ஆகியவற்றை பொருத்தி அதிக செயல்திறனை வழங்கும் அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 4 வீல் டிரைவ் சிஸ்டமும் 8 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸும் பொருத்தப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.