வெளிப்படுத்தப்பட்டது வோல்வோ S90 மற்றும் V90 மாடல்களின் R - டிசைன்

சுவீடன் நாட்டை சேர்ந்த வோல்வோ நிறுவனம் S90 மற்றும் V90 மாடல்களின் ஸ்போர்டியர் வெர்சனான  R - டிசைன் மாடல்களை வெளிப்படுத்தியுள்ளது. பெர்பாமன்ஸ் மாடலான இதில் அதிக செயல்திறனையும் கையாளுமையையும் தருமளவுக்கு புதிய சேஸி பொருத்தப்பட்டுள்ளது. வோல்வோ நிறுவனம் ஏற்கனவே S60 செடான்  மற்றும் V40 ஹேட்ச்பேக் மாடல்களின் R - டிசைன் மாடல்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த  R - டிசைன் வெளிப்புறத்தில் ஸ்போர்ட்டியாக தெரிவதற்காக சில ஒப்பனை மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது. உட்புறம் புதிய கருப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷனில் எந்த மாற்றமும் இல்லை.

சாதாரண S90 செடான் மாடலை  இந்த வருட இறுதியில் தான் இந்தியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளது வோல்வோ நிறுவனம். அதை தொடர்ந்து V90 எஸ்டேட் மாடலும்  S90 மற்றும் V90 மாடல்களின் R - டிசைன் மாடல்களும் அதை தொடர்ந்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.