V40 மாடலை மேம்படுத்தியது வோல்வோ நிறுவனம்

வோல்வோ நிறுவனம் XC90 மற்றும் S90 மாடலை போல V40 மாடலையும் மேம்படுத்தியுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பழைய மாடலுக்கும் இந்த மாடலுக்கும் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை முன்புற கிரில், முகப்பு விளக்குகள் மற்றும் இன்போடைன்மென்ட் சிஸ்டம் ஆகியவை மாற்றப்பட்டுள்ளது. தற்போது உள்ள இன்போடைன்மென்ட் சிஸ்டத்தை மொபைல் போனில் இணைத்துக்கொள்ள முடியும். இந்தியாவில் இந்த மாடல் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் டீசல் என்ஜினில் மட்டும் கிடைக்கிறது. மேலும் இந்த மாடல் 6 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸில் மட்டும் கிடைக்கும்.

இந்த மாடலில் இன்போடைன்மென்ட் சிஸ்டம் அதிக வசதிகள் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்போடைன்மென்ட் சிஸ்டத்துடன் மொபைல் போனை இணைத்துக்கொண்டு மொபைல் பொன் மூலமாகவே காரை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக காரை லாக் செய்வது, குளிரூட்டி மற்றும் என்ஜினை ஆன் ஆப் செய்வது போன்றவற்றை செய்ய முடியும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.