வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட வோல்வோ V40 மற்றும் V40 கிராஸ் கன்ட்ரி

வோல்வோ நிறூவனம் இந்தியாவில்  மேம்படுத்தப்பட்ட வோல்வோ V40 மற்றும் V40 கிராஸ் கன்ட்ரி மாடல்களை வெளியிட்டது.

வேரியன்ட் வாரியாக இதன் விலை விவரம்: 
வோல்வோ V40 - ரூ.28.53 லட்சம்
வோல்வோ V40  கிராஸ் கன்ட்ரி டீசல் - ரூ.29.4 லட்சம்
வோல்வோ V40  கிராஸ் கன்ட்ரி பெட்ரோல் - ரூ.27.2 லட்சம்

பழைய மாடலுக்கும் இந்த மாடலுக்கும் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை முன்புற கிரில், முகப்பு விளக்குகள் மற்றும் இன்போடைன்மென்ட் சிஸ்டம் ஆகியவை மாற்றப்பட்டுள்ளது. தற்போது உள்ள இன்போடைன்மென்ட் சிஸ்டத்தை மொபைல் போனில் இணைத்துக்கொள்ள முடியும்.   V40 மாடல் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் டீசல் என்ஜினில் மட்டும் கிடைக்கிறது. ஆனால் V40 கிராஸ் கன்ட்ரி மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சினில் கிடைக்கும். டீசல் என்ஜின் 150 Bhp திறனையும் 320 Nm இழுவைத்திறனையும்  பெட்ரோல் என்ஜின் 190 Bhp திறனையும் 300 Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும்  இந்த இரண்டு மாடலும் 6 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் கியர் பாக்ஸில் மட்டும் கிடைக்கும்.

இந்த மாடலில் இன்போடைன்மென்ட் சிஸ்டம் அதிக வசதிகள் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்போடைன்மென்ட் சிஸ்டத்துடன் மொபைல் போனை இணைத்துக்கொண்டு மொபைல் பொன் மூலமாகவே காரை கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக காரை லாக் செய்வது, குளிரூட்டி மற்றும் என்ஜினை ஆன் ஆப் செய்வது போன்றவற்றை செய்ய முடியும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.