ரூ 60 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது வோல்வோ V90 கிராஸ் கன்ட்ரி

வோல்வோ நிறுவனம் இந்தியாவில்  V90 கிராஸ் கன்ட்ரி எஸ்டேட் மாடலை ரூ 60 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. இது வோல்வோ நிறுவனத்தால் இந்தியாவில் வெளியிடப்படும் முதல் எஸ்டேட் மற்றும் மூன்றாவது கிராஸ் கன்ட்ரி மாடல் ஆகும். மேலும் இந்த மாடல் D5 எனும் ஒரே ஒரு வேரியன்டில் மட்டும் கிடைக்கும்.

இந்த மாடல் S90 செடான் மாடலின் எஸ்டேட் வெர்சன் ஆகும். இந்த மாடலில் LED முகப்பு விளக்குகள் மற்றும் பின்புற விளக்குகள், எலெக்ட்ரிக் பவர் பின்புற கதவு, 19 ஸ்பீக்கர் உடன் கூடிய சவுண்ட் சிஸ்டம், 9 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் ரேடார் தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 235Bhp திறனையும் 480Nm இழுவைத்திரனையும் வழங்கும். இந்த மாடலில் 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்  பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் அதிகபட்சமாக மணிக்கு 230kmph வேகம் வரை செல்லும். இந்த மாடல் 210மிமீ தரை இடைவெளி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.