ரூ 39.90 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது வோல்வோ XC40 SUV

வோல்வோ நிறுவனம் இந்தியாவில் XC40 SUV மாடலை ரூ 39.90 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாடல் R-Design எனும் ஒரே ஒரு வேரியன்ட்டில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.  இந்த மாடல் தான் வோல்வோ நிறுவனத்தின் சிறிய SUV மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல்கட்டமாக 200 மாடல்கள் இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் வோல்வோ நிறுவனத்தின் புதிய Compact Modular Architecture (CMA) பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 187bhp திறனையும் மற்றும் 400Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த திறன் எட்டு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் torque-on-demand ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலம் நான்கு வீலுக்கும் கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலில் ஸ்போர்ட், கம்பர்ட் மற்றும் டைனமிக் என மூன்று டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 7.9 வினாடிகளில் கடக்கும் மற்றும் அதிகபட்சமாக மணிக்கு 210 கிலோமீட்டர் வேகம் வரையும் செல்லும் வல்லமை கொண்டது. 

இந்த மாடலில் கிளைமேட் கன்ட்ரோல், பனோராமிக் சன் ரூப், குரூஸ் கன்ட்ரோல், 360-டிகிரி கேமரா, பார்க்கிங் அசிஸ்ட், டிரைவ் மோடு மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் GLA, ஆடி Q3 மற்றும் BMW X1 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.