செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் வோல்வோ XC90 பிளக் இன் ஹைபிரிட் SUV

வோல்வோ நிறுவனம் செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தியாவில் XC90 பிளக் இன் ஹைபிரிட் SUV  மாடலை வெளியிட உள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் XC90 மாடலுக்கு இந்த மாடலுக்கு எஞ்சினில் மட்டும் தான் மற்றம் வேறு எந்த மாற்றமும் இல்லை.

இந்த புதிய மாடலில் 2.0 லிட்டர் எஞ்சினுடன் எலெக்ட்ரிக் மோட்டோரும் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை பிளக் இன் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். மொத்தமாக இந்த மாடல் 400 Bhp  திறனையும் 64 Nm  இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் 8 ஸ்பீட் கொண்ட கியர்ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் பியூர், ஹைபிரிட் மற்றும் பவர் என மூன்று டிரைவிங் மோடுகளையும்  கொண்டுள்ளது.

வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்பு, சொகுசு உபகரணங்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்காது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலில் உள்ள அனைத்தும் இதிலும் இருக்கும். இந்த மாடல் ரூ.1.3 முதல் ரூ.1.5 கோடி வரை விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.