உலகின் முதல் வர்த்தக ரீதியிலான பறக்கும் காரின் விற்பனை விரைவில் தொடங்கப்படும்: முன்பதிவு தொடங்கப்பட்டது

நெதர்லாந்தை சேர்ந்த பிஏஎல்-வி எனும் நிறுவனம் லிபெர்ட்டி ஸ்போர்ட் எனும் உலகின் முதல் பறக்கும் காரை வெளிப்படுத்தியுள்ளது. இந்த வர்த்தக ரீதியிலான விற்பனை 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை நான்கு லட்சம் டாலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ 2.68 கோடி கொண்டதாக இருக்கும். மேலும் இதன் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த கார் தரையில் செல்லும் போது இதன் இறக்கைகள் மடங்கி இருக்கும். பறக்கும் போது இறக்கைகள் ஹெலிகாப்டர் போல் விரிந்து விடும். இந்த காரை டேக் ஆப் செய்ய 330 மீட்டர் நீள ரன்வேவும் வேண்டும் அதே சமயம் 50  கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல வேண்டும். 

இந்த கார் பறக்கும் போது 200 BHP திறனையும் தரையில் செல்லும் போது 100 BHP திறனையும் வழங்கும். மேலும் பறக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்திலும் 5.4 KMPL  மைலேஜையும் வழங்கும். அதேபோல் தரையில் செல்லும் போது அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலும் 13.1 KMPL  மைலேஜையும் வழங்கும்.

இந்த பறக்கும் கார் 664 கிலோ எடை கொண்டது. 910 கிலோ எடை வரை சுமந்து கொண்டு பறக்கும். இந்த காரை ஓட்டுவதற்கு பிரத்யேக லைசென்ஸ் தேவைப்படும். மேலும் இந்த காரில் இரண்டு பேர் மட்டுமே செல்ல முடியும்.  இந்த பறக்கும் காருக்கு இந்தியாவிலும் காப்புரிமை பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இந்த பறக்கும் கார் இந்தியாவிலும் வெளியிடப்படலாம் என ஒரு செய்தி உலா வருகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.