செப்டம்பர் 1 ஆம் தேதி வருகிறது மாருதி சுசுகி - சியாஸ் ஹைப்ரிட் (Maruti Suzuki Ciaz Hybrid)

மாருதி சுசுகி - சியாஸ் மாடலின் ஹைப்ரிட் மாடல் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. மேலும் இந்த ஹைப்ரிட் மாடல் தற்போது இருக்கும் மாடலுக்கு மாற்றாகவும் நெக்ஸா ஷோரூம்களில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

புதிய ஹைப்ரிட்  மாடலில் என்ஜினில் எந்த மாற்றமும் இருக்காது மேலும் இது ஒரு முழுமையான ஹைப்ரிட்  மாடலும் கிடையாது. தற்போது மாடலில் உள்ள 1.3 லிட்டர் மல்டி ஜெட் என்ஜினில் SHVS (Smart Hybrid Vehicle by Suzuki) எனும் தொழில்நுட்பம் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கும். இந்த தொழில்நுட்பம் ஜெனீவா வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது மேலும் சமீபத்தில் இந்தோனேசியாவில் நடந்த வாகன கண்காட்சியில் காட்சிக்கும் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தொழில்நுட்பம் என்ஜின் ஸ்டார்ட் செய்யும் போதும் ஐடிலிங்க் கண்டிசனில் இருக்கும் போதும் கூடுதல் திறனை வழங்க உதவி புரியும். மேலும் கூடுதல் இழுவைதிறனையும் வழங்கும். அதனால் இதன் மைலேஜ் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஹைப்ரிட் மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும் எனவும் விலையில் ருபாய் 50000 வரை  மற்றம் இருக்கும் எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.