S500 coupe, S63 AMG coupe மற்றும் G63 AMG ஆகிய மூன்று மாடலை நாளை வெளியிடுகிறது மெர்சிடிஸ் பென்ஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் S 500 coupe , S 63 AMG coupe மற்றும் G 63 AMG ஆகிய மூண்டு மாடல்களை நாளை (ஜூலை 30) வெளியிடுகிறது.ஜெர்மன் நாட்டை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் 2015 ஆம் ஆண்டு முடிவுக்குள் 15 மாடல்களை வெளியிடுவதாக இருந்தது. ஏற்கனவே 6 மாடல்களை இந்த வருடத்தில் மட்டும் வெளியிட்ட நிலையில் நாளை 3 மாடல்களை வெளியிடுகிறது.

S 500 coupe மாடலில் 4.6 லிட்டர் V8 டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 455 bhp திறனும் 700 Nm இழுவைதிறனும் கொண்டது. 

S 63 AMG coup மாடலில் 5.5 லிட்டர் V8 டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 585 bhp திறனும் 900 Nm இழுவைதிறனும் கொண்டது. 

S 63 AMG coup மாடலில் 5.5 லிட்டர் V8 டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 536 bhp திறனும் 760 Nm இழுவைதிறனும் கொண்டது. 

அனைத்து மாடல்களும் 4 MATIC எனப்படும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டதுடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்து மாடல்களும் 7 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் ட்ரான்ஸ் மிசன் சிஸ்டதுடனும் கிடைக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.