அடுத்த தலைமுறை ஹுண்டாய் எலன்ட்ரா

அடுத்த தலைமுறை ஹுண்டாய் எலன்ட்ரா  மாடலின் ஒரே ஒரு படம் மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பக்கவாட்டு வடிவமும் ஓரளவு முன்புற கிரில்லும் மட்டும் தெரிகிறது. இந்த மாடலும் கூப் மாடல் வடிவத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் ஆகியவையும் இந்த படத்தில் தெளிவாக தெரிகிறது.  

என்ஜின் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. பழைய மாடல் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.8 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.6 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது. 

2016 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெறும் வாகன கண்காட்சியில் கட்சிக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2016 ஆம் ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.