மேம்படுத்தப்பட்ட மாருதி சுசுகி - எர்டிகா மாடல் வெளியிடப்பட்டது

சில ஒப்பனை பொருள்களை மட்டும் சேர்த்து மேம்படுத்தப்பட்ட மாருதி சுசுகி - எர்டிகா மாடலை இந்தோனேசியா வாகன கண்காட்சியில் மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட்டது. முன்புறத்தில் மட்டும் சில மாற்றங்களை செய்துள்ளது. புதிய முன்புற குரோம் கிரில், பனி விளக்குகளை சுற்றிலும் குரோம் வேலைப்பாடு ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை புதிய பக்கவாட்டு கண்ணாடிகள் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது.  பின்புறத்திலும் சில குரோம் வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளது. பின்புற பார்கிங் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. 

உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. எஞ்சினிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை அதே 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 லிட்டர்    பெட்ரோல் என்ஜின்   மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினிலும் கிடைக்கும் .

இதன்   பெட்ரோல் என்ஜின்  1373cc கொள்ளளவும்   மற்றும்  டீசல் என்ஜின்  1248cc கொள்ளளவும் கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின்  95bhp (6000 rpm) திறனும்  130Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. இதன் பெட்ரோல்  மாடல் 16.02kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது.
 
இதன்  டீசல்  என்ஜின்  90bhp (4000 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் டீசல்  மாடல் 20.77kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது .  

இதன் CNG என்ஜின்  95bhp (6000 rpm) திறனும்  130Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது.  இதன் CNG மாடல் 22.8km/kg மைலேஜ்  தரும் என ARAI சான்றளிதுள்ளது 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.