2015 டோக்யோ மோட்டார் கண்காட்சி: டோயோடா SFR ஸ்போர்ட்ஸ் கார் காட்சிப்படுத்தப்பட்டது

டொயோட நிறுவனம் புதிய ஆரம்ப நிலை ஸ்போர்ட்ஸ் காரான SFR மாடலை 2015 டோக்யோ மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கு வைத்திருந்தது. இது சிறிய மற்றும் குறைந்த எடை கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். இந்த கார் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் கிளாசிக் கூப் காரின் வடிவத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 128 bhp திறனை வழங்கும். மேலும் இந்த மாடலில் 6 வேக கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பின்புற வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. 

இந்த மாடலில் 4 பேர் வரை அமர முடியும். இந்த மாடல் 12 முதல் 15 லட்சம் விலை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால் இந்தியாவில் வெளியிடப்படுமா அப்படி வெளியிடப்பட்டால் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.