2015 டோக்யோ மோட்டார் கண்காட்சி: அறிமுகப்படுத்தப்பட்டது சுசுகி இக்னிஸ்

சுசுகி நிறுவனம் டோக்யோ மோட்டார் கண்காட்சியில் இக்னிஸ்  மாகலை அறிமுகப்படுத்தியது. இதி பலேனோ மாடலின் அடிப்படையில் எருவாக்கப்பட்ட மாடல் ஆகும். மேலும் இது ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் im 4 என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் 4 மீட்டருக்கு குறைவான ஒரு கிராஸ் ஓவர் மாடல் ஆகும். காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 90 bhp திறனையும் 118 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் CVT கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த மாடல் பலேனோவில் கிடைக்கும் அதே என்ஜின் ஆப்சனில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் 2016 ஆம் ஆண்டு டெல்ல்லி வாகன கண்காட்சியில் வெளியிடப்படும் எனவும் திர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் மாருதி பலேனோ மற்றும் S கிராஸ் மாடல்களிக்கு இடையிலான விளையி நிலைநிறுத்தப்படும். மேலும் 6 முதல் 9 லட்சம் விலை கொண்டதாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.