ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சி: ஆடி e - ட்ரான் குவாட்ரோ காட்சிப்படுத்தப்பட்டது

முழுமையான எலெக்ட்ரிக் காரான e - ட்ரான் குவாட்ரோ SUV மாடலை ஃபிரான்க் ஃபுர்ட் மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தியது ஆடி நிறுவனம்.  இந்த மாடல் 495 bhp திறனையும் 800 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் 100 கிலோ மீட்டர் வேகத்தை 4.2 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது. இந்த மாடல் அதிகபட்சமாக 209 கிலோ மீட்டர் வரை செல்லும். 

இந்த மாடல் ஆடி நிறுவனத்தின்  ஒரு முழுமையான மற்றும் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த மாடலில் முன்புற அச்சில் ஒரு மோட்டார் பின்புற அச்சில் இரண்டு மோட்டார்  மூன்று எலெக்ட்ரிக் மோட்டார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலின்  ஏரோடைனமிக் வடிவத்தில் அதிக கவனம் செலுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஆடி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடலின் மேற்கூரை சோலார் பேனல்களை கொண்டது. ஆடி e - ட்ரான் குவாட்ரோ எலெக்ட்ரிக் கார் மாடல் 2018 ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மாடலின் டீசர் வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://www.youtube.com/watch?v=A-B3aNfIXkA&feature=youtu.be

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.