2016 டெல்லி வாகன கண்காட்சி: ரூ.39.9 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது ஜாகுவார் XE

ஜாகுவார் நிறுவனம் ரூ.39.9 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் ஜாகுவார் XE மாடலை 2016டெல்லி வாகன கண்காட்சியில் வெளியிட்டது. இதன் முன்பதிவு சில நாட்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. இது ஜகுவார் நிறுவனத்தின் ஆரம்ப நிலை மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் இரண்டு விதமான திறன்களில் கிடைக்கும். இது 200 Bhpமற்றும் 240 Bhp என இரண்டு வித திறன்களில் கிடைக்கும். இந்த மாடலில் ஜகுவார் நிறுவனத்தின்அனைத்து விதமான வசதிகளும் கிடைக்கும். இந்த மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் C - கிளாஸ், BMW 3 சிரீஸ் மற்றும் ஆடி A 4 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

இத்துடன் ஜகுவார் நிறுவனம் F - பேஸ் SUV மாடலையும் காட்சிப்படுத்தியது. இந்த மாடல் 2.0 லிட்டர் டீசல்,பெட்ரோல் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜினில் இரண்டு விதமான திறன் என நன்கு விதமான என்ஜின்ஆப்சன்களில் கிடைக்கும். இதன் அனைத்து மாடல்களும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தில் கிடைக்கும். இதன் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 180 bhp  திறனையும், 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 240 bhp  திறனையும், 3.0லிட்டர் டீசல் என்ஜின் 340 bhp  திறனையும் மற்றும் 380 bhp  திறனையும் வழங்கும்.

இந்த மாடல் இலகு எடை கொண்ட அலுமினியத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் மிக சிறப்பானகையாளுமையையும், சொகுசான பயண அனுபவத்தையும் தரும் என ஜகுவார் நிறுவனம் கூறியுள்ளது.இந்த மாடலில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளதால் கரடு முரடான சாலைகளிலும் சிறப்பானஅனுபவத்தை கொடுக்கும் எனவும் கூறியுள்ளது. மேலும் இந்த மாடல் இந்தியாவில் ஜூன் மாதத்தில்வெளியிடப்படும் எனவும் எதிர்பார்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.