2016 டெல்லி வாகன கண்காட்சி: காட்சிப்படுத்தப்பட்டது மாருதி சுசுகி இக்னிஸ்

மாருதி சுசுகி நிறுவனம் இக்னிஸ் மாடலை 2016 டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இது ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் im 4 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் 4 மீட்டருக்கு குறைவான ஒரு கிராஸ் ஓவர் மாடல் ஆகும். இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 டீசல் என்ஜின்களில் கிடைக்கும்.  இதன் பெட்ரோல் என்ஜின்  83 bhp திறனையும் 115 Nm இழுவைதிறனையும் வழங்கும். இதன் டீசல் என்ஜின் 74 bhp திறனையும் 190 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஆட்டோமேடிக் கியர் பாக்சிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மாடல் மாருதி பலேனோ மற்றும் S கிராஸ் மாடல்களிக்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்படும். மேலும் 6 முதல் 9 லட்சம் விலை கொண்டதாக இருக்கும். இது மகிந்திரா KUV 100 மாடலுக்கு போட்டியாக இருக்கும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.