நவம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் AMG CLA 45 மற்றும் GLA 45

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில்  AMG CLA 45 மற்றும் GLA 45 மாடல்கள் நவம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. இது சாதாரண மாடலின் AMG பெர்பார்மன்ஸ் பிராண்ட் மாடல் ஆகும். இந்த மாடல்கள் இந்தியாவில் இந்த ஆண்டு வெளியிடப்படும் ஆறாவது மற்றும் ஏழாவது AMG மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் கருப்பு நிற வண்ணமும் கூடுதலாக மஞ்சள் நிற அலங்காரமும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில மேட் கருப்பு வண்ணத்திலான கிராபிக்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறம் மற்ற AMG மாடல்கள் போலவே கருப்பு நிறத்தில் அனைத்து விதமான வசதிகளையும் கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்திலும் மஞ்சள் நிற அலங்காரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 

AMG CLA 45 மற்றும் GLA 45 என இரண்டு மாடல்களிலும் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 375Bhp திறனையும் 475Nm இழுவைதிறனையும் வழங்கும். இந்த திறன் DCT 7 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மற்றும் 4MATIC ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலம் நான்கு வீலுக்கும் கடத்தப்படுகிறது. மேலும் இந்த மாடலில் AMG மாடல்களில் உள்ள டைனமிக் பிளஸ் எனும் நான்கு வித டிரைவிங் மோடுகளும்  கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.