2018 டெல்லி வாகன கண்காட்சி: வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட ஹூண்டாய் எலைட் i20

ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை எலைட் i20 மாடலை ரூ 5.35 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும் மற்றும் சில புதிய வண்ணங்களும் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. என்ஜின் மற்றும் செயல்திறனில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய மாடலில் புதிய முகப்பு கிரில் (ஏற்கனவே வெர்னா, கிராண்ட் i10 மற்றும் எக்ஸென்ட் மாடல்களில் இந்த கிரில் உள்ளது), புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர் ஆகியவை இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பின்புற விளக்குகள் மற்றும் பின்புற வடிவமைப்பும் சிறிது மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் சில உபகரணங்கள் வெர்னா மாடலில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்தில் டாப் வேரியண்டில் புதிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே  1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 83 bhp (6000 rpm) திறனும் 117Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் டீசல் என்ஜின்  மாடல் 90 bhp (4000 rpm) திறனும் 224Nm (1750-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. புதிய ஹூண்டாய் எலைட் i20 மாடல் வோல்க்ஸ்வேகன் போலோ, மாருதி பலேனோ மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.