இந்தியாவில் வெளியிடப்பட்டது மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு ஹூண்டாய் க்ரெடா

ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு க்ரெடா SUV மாடலை ரூ 9.43 லட்சம் டெல்லி ஷோரூம் ஆரம்ப விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மாற்றங்களும், புதிய வண்ணங்கள் மற்றும் சன்ரூப் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. விலையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. 

வேரியன்ட் வாரியாக டெல்லி ஷோரூம் விலை விவரம்: 

பெட்ரோல்:

  • Hyundai Creta E- ரூ 9.43 லட்சம்
  • Hyundai Creta E+- ரூ 9.99 லட்சம்
  • Hyundai Creta SX - ரூ 11.93 லட்சம்
  • Hyundai Creta SX Dual Tone- ரூ 12.43 லட்சம்
  • Hyundai Creta SX AT- ரூ 13.43 லட்சம்
  • Hyundai Creta SX (O)- ரூ 13.59 லட்சம்

 

டீசல்:

  • Hyundai Creta 1.4 E+- ரூ 9.99 லட்சம்
  • Hyundai Creta 1.4 S - ரூ 11.73 லட்சம்
  • Hyundai Creta 1.6 S AT- ரூ 13.19 லட்சம்
  • Hyundai Creta 1.6 SX - ரூ 13.23 லட்சம்
  • Hyundai Creta 1.6 SX Dual Tone - ரூ 13.73 லட்சம்
  • HyundaI Creta 1.6 SX AT- ரூ 14.83 லட்சம்
  • Hyundai Creta SX (O)- ரூ 15.03 லட்சம்

இந்த மாடலில் முன்புறத்தில் புதிய மற்றும் பெரிய க்ரில், புதிய பனி விளக்குகள், பின்புறத்தில் புதிய விளக்குகள், புதிய அலாய் வீல், சன்ரூப்  மற்றும் புதிய பின்புற வடிவமைப்பு ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. உட்புறத்திலும் பெரிய மாற்றங்கள் இல்லை. குரூஸ் கன்ட்ரோல், ஆறு காற்றுப்பை, பின்புற கேமரா என முந்தய மாடலில் உள்ள அணைத்து வசதிகளும் இந்த மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் புதிதாக ஆரஞ்சு வண்ணத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இல்லை, அதே 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.4 & 1.6 லிட்டர் டீசல் என்ஜின்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 123 bhp (6400 rpm) திறனும் 154Nm (4850rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மற்றும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின்  மாடல் 90 bhp (4000 rpm) திறனும் 224Nm (1500-2750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும், 1.6 லிட்டர் டீசல் என்ஜின்  மாடல் 128 bhp (4000 rpm) திறனும் 265Nm (1500-3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.  1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் மாடல்கள் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளிலும், 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் ஆறு ஸ்பீட் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்விலும் கிடைக்கும். இந்த புதிய ஹூண்டாய் க்ரெடா மாடல் ரெனோ டஸ்டர், நிசான் டெர்ரானோ மற்றும் ரெனோ கேப்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.