வெளியானது 2018 ஆம் ஆண்டு மஹிந்திரா XUV500 மாடலின் வெளியீட்டு தேதி விவரம்

மஹிந்திரா நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய  2018 ஆம் ஆண்டு XUV500 மாடலை ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியிட உள்ளது. இந்த மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் சில ஒப்பனை மாற்றங்களும் செயத்திறனில் சில மாற்றங்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் சோதனை ஒட்டப்படங்கள் சில இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது. 
 

இதன் சோதனை ஒட்டப்படங்களை வைத்து பார்க்கும் போது, இதன் முன்புறத்தில் புதிய கிரில், புதிய பம்பர், புதிய முகப்பு விளக்குகள் ஆகியவையும் பிபுரத்தில் புதிய பின்புற விளக்குகள், பின்புற வடிவமைப்பு, பிபுர பம்பர் ஆகியவையும் மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலில் புதிய அலாய் வீல், ரூப் ஸ்பாய்லர், உற்புற வடிவமைப்பு என ஏராளமான மாற்றங்கள் மற்றும் சில புதிய உபகரணங்களும் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. 

எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது, அதே 2.2 லிட்டர் mHawk எஞ்சினில் தான் கிடைக்கும். எனினும் இதன் திறன் சற்று அதிகரிக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தற்போதைய எஞ்சின் 140bhp (3750 rpm) திறனும் 330Nm (1600-2800rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் 2.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் விலையிலும் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் டாடா ஹெக்ஸா, ஜீப் காம்பஸ் மற்றும் ரெனோ கேப்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும். 

Image Source: Team-BHP.com

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.