மேம்படுத்தப்பட்ட சியாஸ் மாடலின் டீசரை வெளியிட்டது மாருதி சுசூகி

மாருதி சுசூகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட சியாஸ் மாடலின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மாருதி நிறுவனம் சியாஸ் மாடலுக்கென பிரத்தியேகமான டீசர் விடியோவை வெளியிடவில்லை, நெக்ஸா ஷோரூம் தொடர்பான வீடியோவில் மேம்படுத்தப்பட்ட சியாஸ் மாடலும் சில காட்சிகளில் காட்டப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடலில் சில ஒப்பனை மாற்றங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த மேம்படுத்தப்பட்ட சியாஸ் மாடலில் புதிய முகப்பு க்ரில், புதிய முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள், முன்புற மற்றும் பின்புற பம்பர்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாற்றங்களும் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றபடி எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது, அதே 1.4 லிட்டர்  K14B VVT  பெட்ரோல் என்ஜின்   மற்றும் 1.3 லிட்டர் DDiS200 டீசல் எஞ்சின்களில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின்  92bhp (6200 rpm) திறனும்  130Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் டீசல்  என்ஜின்  89bhp (4000 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் இந்த வருட இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.