ரூ 65.25 லட்சம் விலையில் வெளியிடப்பட்டது புதிய 2018 மெர்சிடிஸ் பென்ஸ் C-கிளாஸ் கேப்ரியோலெட்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய 2018 C-கிளாஸ் கேப்ரியோலெட் மாடலை ரூ 65.25 லட்சம் ஷோரூம் விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடலில் சில ஒப்பனை மேம்பாடுகளும் மற்றும் குறிப்பாக புதிய BSVI பெட்ரோல் என்ஜினும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் BSIV எரிபொருளில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் C300 எனும் ஒரே ஒரு டாப் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

இந்த மாடலின் வெளிப்புறத்தில் புதிய பம்பர், புதிய மற்றும் பெரிய கிரில் மற்றும் புதிய முகப்பு விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை, எனினும் புதிய 10.25-இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் உட்புறம் சில வித இருக்கை லெதர் மற்றும் மாற வேலைப்பாடு தேர்வில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாடல் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினில் மட்டும் கிடைக்கும். இந்த எஞ்சின் 258PS திறனும் 370Nm இழுவைத்திறனும் கொண்டது. இந்த மாடலில் 9G-Tronic ட்ரான்ஸ்மிஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6.2 வினாடிகளில் கடந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.