ரூ 34.9 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது 2018 மினி கன்ட்ரிமென்

மினி இந்தியா நிறுவனம் 2018 ஆம் ஆண்டு கன்ட்ரிமென் மாடலை ரூ 34.9 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டாம் தலைமுறை மாடல் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் வேரியன்ட்டுகளில் கிடைக்கும். இந்த மாடல் இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. 

வேரியன்ட் வாரியாக ஷோரூம் விலை விவரம்:
பெட்ரோல்
கன்ட்ரிமென் கூப்பர் S - ரூ 34.9 லட்சம்
கன்ட்ரிமென் JCW - ரூ 41.4 லட்சம்
டீசல் 
கன்ட்ரிமென் கூப்பர் SD - ரூ 37.40 லட்சம்

இந்த புதிய இரண்டாம் தலைமுறை மாடல் முந்தய மாடலை விட 200 மில்லிமீட்டர் அதிக நீளமும், 30 மில்லி மீட்டர் அதிக அகலமும் மற்றும் 75 மில்லிமீட்டர் அதிக வீல் பேஷும் கொண்டது. இதனால் இதன் பொருள் வைக்கும் பகுதி 450 லிட்டர் அளவு உயர்ந்துள்ளது. மேலும் இந்த மாடலில் 19 இன்ச் அலாய், LED பின்புற விளக்குகள், இரட்டை புகை போக்கி, 6.5 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், சான் ரூப், எலெக்ட்ரிக் சீட், பார்க்கிங் சென்சார், ABS, ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், கார்னர் பிரேக் கன்ட்ரோல் மற்றும் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. JCW இன்ஸ்பைர்ட் வேரியண்டில் மட்டும் 8.8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 192bhp திறனையும் 280Nm இழுவைத்திறனையும் வழங்கும். மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 190bhp திறனையும் 400Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடலில் எட்டு ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் BMW X1 மாடல் தயாரிக்கப்பட்ட அதே பிளாட்பார்மில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.