நாளை இந்தியாவில் வெளிப்படுத்தப்படும் ஹூண்டாய் வென்யூ காம்பேக்ட் SUV

ஹூண்டாய் நிறுவனம் வென்யூ காம்பேக்ட் SUV மாடலை நாளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்த உள்ளது. மேலும், நியூயார்க் மோட்டார் கண்காட்சியில் உலகளவிலும் வெளிப்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடல் இந்தியாவில் மே மாதம் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதல் டீசர் வீடியோ சில நாட்களுக்கு முன்பு தான் வெளியிடப்பட்டது. இந்த டீசரில் வென்யூ SUV மாடலின் வடிவமைப்புகள் ஏதும் தெளிவாக தெரியவில்லை. எனினும் ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா மற்றும் க்ரெட்டா போன்ற மாடல்களின் வடிவமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. மேலும், இந்த மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய BlueLink Connected Car தொழில்நுட்பம் தொடர்பான விவரங்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் டாடா நெக்ஸன், மாருதி சுசூகி விட்டாரா ப்ரீசா, போர்டு ஈக்கோ ஸ்போர்ட், மஹிந்திரா XUV300 மற்றும் TUV300 போன்ற மாடல்களுக்கு போட்டியாக நிலைநிறுத்தப்படும்.

இந்த மாடலில் சன் ரூப் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் சிஸ்டம், காற்றுப்பைகள், ABS மற்றும் எப்பிடி என ஏராளமான வசதிகள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜின் தொடர்பான விவரங்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் க்ரெட்டா அல்லது எலைட் i20 எஞ்சினில் சிறிய மாறுதல்களுடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாடல் டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் தேர்விலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹூண்டாய் QXi காம்பேக்ட் SUV மாடல் இந்த வருட மத்தியில் தோராயமாக ரூ 8 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களை உடனுக்குடன் தெரிந்த்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்...

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.