டாடா நெக்ஸனை தொடர்ந்து குளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றது மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா

டாடா நெக்ஸன் காம்பேக்ட் SUV மாடலை தொடர்ந்து மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா மாடலும் குளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்று சாதனை செய்துள்ளது. இந்த மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டையும் சிரியவர்களுக்கான பாதுகாப்பில் 2 ஸ்டார் தர மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. மாருதி கார்கள் பொதுவாக பாதுகாப்பு குறைவானது என்பதை விட்டாரா ப்ரீஸா கார் மூலம் மாற்ற தொடங்கியுள்ளது சிறப்பானது. 

இந்த சோதனையில் இரண்டு காற்றுப்பை, ABS மற்றும் ISOFIX Child Restraint System உடன் கூடிய மாடல் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சோதனையில் மணிக்கு 64 கிலோ மீட்டர் வேகத்தில் கார் மோதப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடலுடன் சோதனை செய்யப்பட்ட ரெனோ லாட்ஜி மாடல் 0 ஸ்டார் தர மதிப்பீட்டை மட்டுமே பெற்றது, இந்த சோதனையில் காற்றுப்பை இல்லாத ரெனோ லாட்ஜி மாடல் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுவரை வோல்க்ஸ் வேகன் போலோ, டொயோடா எட்டியோஸ், டாடா செஸ்ட், டாடா நெக்ஸன் மற்றும் மாருதி சுசூகி விட்டாரா ப்ரீஸா என ஐந்து மாடல்கள் மட்டுமே குளோபல் NCAP சிதைவு சோதனையில் 4 ஸ்டார் தர மதிப்பீட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.